லேபிள்கள்

16.3.15

ஆசிரியர்களிடம் கட்டாய வசூல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 'ஆன்-லைனில்' ஆசிரியர் ஊதிய விபரங்களை பதிவு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் கட்டாய வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.



திண்டுக்கல் மாவட்டத்தில் 1,419 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. ஐந்தாயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது ஊதிய விபரங்கள் 'சிடி'களில் ஏற்றப்பட்டு கருவூலத்தில் அளிக்கப்படுகின்றன. இதனை தவிர்க்க 'இ-பே' முறையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்காக 'ஆன்-லைனில்' ஆசிரியர் ஊதிய விபரங்கள் ஏற்றப்படுகின்றன.
இதற்கு பழநி, ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் ஒவ்வொருவரிடமும் ரூ.150 முதல் ரூ.200 வரை கட்டாய வசூல் செய்வதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக்ரெய்மண்ட் கூறுகையில், “தனியார் 'இன்டர்நெட்' மையத்தில் பதிவு செய்வதாக கூறி உதவிதொடக்க கல்வி அலுவலகத்தில் கட்டாய வசூல் செய்கின்றனர். உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாண்டியராஜன் கூறுகையில், “ஆசிரியர்களிடம் வசூலிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன். புகார் குறித்து விசாரிக்கப்படும்,” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக