லேபிள்கள்

17.3.15

டிப்ளமோ, பொறியியல் படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது: யுஜிசி

பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளையோ அல்லது டிப்ளமோ படிப்புகளையோ தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.

தொலைநிலைக் கல்வி கவுன்சில் (டி.இ.சி.) யுஜிசி-இன் கீழ் இப்போது இயங்கி வரும் நிலையில், பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை யுஜிசி அனுப்பியிருக்கிறது.

அதில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுபோல, எந்தவொரு கல்வி நிறுவனமும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளைத் தவிர வேறு எந்தத் தொழில் படிப்புகளையும் தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது.

இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், கட்டடக் கலை, நகர திட்டமிடல், மருந்தாளுநர், ஹோட்டல் மேலாண்மை-உணவுத் தொழில்நுட்பம், முதுநிலை மேலாண்மை டிப்ளமோ படிப்பான பி.ஜி.டி.எம். உள்ளிட்ட படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது.

இதை மீறி இந்தப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக