ஆசிரியர்களின், 'ஜாக்டா ' மற்றும் 'ஜாக்டோ' அமைப்புக்கு போட்டியாக, அரசுக்கு ஆதரவாக உருவான, 'ஜாக்கோட்டா' அமைப்பில் திடீர் விரிசல் ஏற்பட்டு உள்ளது. 'ஜாக்கோட்டா' அமைப்புக்கு எதிராக, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, முதல்வருக்குபுகார் அனுப்பியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பின்...:
அரசுப் பள்ளி ஆசிரியர்களின், சங்கங்கள் இணைந்து,'ஜாக்டா ' மற்றும், 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கை குழு உருவாகி உள்ளன. இக்குழு, அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், அரசுக்கு ஆதரவாக'ஜாக்கோட்டா' என,அமைப்பு புதிதாக உருவாகியது . இதனால், ஆசிரியர் சங்கங்களுக்குள் பிளவு ஏற்படும் என, அதிகாரிகள் நினைத்தனர். ஆனால், இதற்கு மாறாக, 'ஜாக்கோட்டா' அமைப்பில் தான் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில், தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பி உள்ளனர். அதில்,'ஜாக்கோட்டா'வில் உள்ள, அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் பெயரை பயன்படுத்தியுள்ள ஜார்ஜ் என்பவர், தங்கள் அமைப்பின் நிர்வாகி இல்லை என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, கல்வித் துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நிறுவனத் தலைவர் குகானந்தம் கூறியதாவது: 'ஜாக்கோட்டா' என்ற கூட்டுக்குழுவை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படும்ஜார்ஜ் என்பவர், தற்போது ஆசிரியர் இல்லை; ஓய்வு பெற்றவர். பல ஆசிரியர் சங்கங்களை இணைத்து, அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் பொதுச் செயலராக இருப்பதாக ஜார்ஜ் கூறுகிறார். நாங்கள் தான், 1981ம் ஆண்டு முதல், மறைந்தமுதல்வர் எம்.ஜி.ஆரால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக இருந்து வருகிறோம்.
அமைப்புகளை இணைத்து:
கடந்த, 1996ல், தொடக்கப் பள்ளி ஆசிரியர் இணைப்பு இயக்கம், அகில இந்திய ஆசிரியர் பேரவை, தமிழ்நாடு ஆசிரியர் பேரவை, ஆசிரியர் பேரவை, அரசு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு முன்னேற்றக் கூட்டணி உள்ளிட்ட அமைப்புகளை ஏற்படுத்தி, அனைத்திந்திய ஆசிரியர் பேரவையை, சட்டபூர்வமாக உருவாக்கினோம். 10 ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் போராட்டத்தின் போது, அரசுக்கு ஆதரவாக நின்று, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். எனவே, எங்கள் பேரவையின் பெயரை, வேறு யாரும் பயன்படுத்த முடியாது. இதுகுறித்து, நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக