லேபிள்கள்

17.3.15

CRC பயிற்சி வகுப்புக்கு ஈடுசெய் தற்செயல் விடுப்பு ஆணை பெற்று தந்த TNGTF மாநில பொறுப்பாளர்களுக்கு நன்றி

CRC பயிற்சி நாட்களுக்கு  பள்ளிக்கல்விதுறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஈடுசெய் தற்செயல் விடுப்பும் தொடக்ககல்வித் துறை
ஆசிரியர்களுக்கு பணிநாட்களாக 2013 ஆண்டு களில் கருதப்பட்டது. ஆனால் 2014 ஆம் ஆண்டு முதல் தொடக்க கல்வி துறை யின் பணிநாட்களுக்கு அதிகமாக SSA பயிற்சி நாட்களை தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள்  attend செய்து வந்தனர். பணிநாட்களுக்கு அதிகமாக கலந்து கொள்ளும் SSA  பயிற்சி நாட்களுக்கு அவர்களுக்கு ஈடுசெய் விடுப்பு மறுக்கப்பட்டது. தொடக்க கல்வி துறை ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க கோரி கடந்து ஜுன் 2014 முதல் தொடக்க கல்வி துறை இயக்குனரையும், SSA இயக்குனரையும் சந்திக்கும் போதெல்லாம் நமது  TNGTF மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தினார். கடந்த வாரம் தொலைபேசியில் தொடக்க கல்வி இயக்குனரிடம் இதுபற்றி நமது மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை வைக்கும் போது நேற்று (16.3.15)  ஈடுசெய் விடுப்புக்கான அரசாணை வெளிவரும் என தெரிவித்து இருந்தார். மேலும் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கும் வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் அவர்கள் தெரிவித்து இருந்தார். இருப்பினும் பல மாவட்டங்களில் ஈடுசெய் விடுப்பு வழங்குவதில் குழப்பம் நிலவியது.  இது குறித்து பல ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை விடுக்க தொடங்கினர்.ஆனால் இன்று (17.3.15)  SSA பயிற்சி யில் கலந்து கொள்ளும் தொடக்க கல்வி துறை ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரசாணை வெளிவர தொடர்ந்து முயற்சி செய்த TNGTF மாநில பொதுச்செயலாளருக்கு நன்றியை  தெரிவித்து கொள்கிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக