பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவியாளர்
பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு குரூப்-2-ல் பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 346 பேருக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் அமைந்துள்ள கலந்தாய்வு மையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
கலந்தாய்வில் கலந்துகொள்பவர்கள் தங்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய பட்டியலின் வரிசை எண்ணின்படி கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக