கிராமப்புற மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்க, உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்கு, செப்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.கிராமப்புற மாணவ, மாணவியரில், நன்றாக படிப்பவர்கள், எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.
இப்போது, எட்டாம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களில், 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வில் பங்கேற்கலாம். அவர்களுக்கு பள்ளிகளில் இருந்து விண்ணப்பம் அளிக்க, அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளி தலைமை ஆசிரியர், தேர்வு விண்ணப்பத்தை, www.tndge.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். வரும், 31ம் தேதி முதல் செப்., 3க்குள், விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக