பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் வியாழக்கிழமை (ஆக.27) முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி
பெறாத மாணவர்களுக்கான உடனடி சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஜூலை 17 முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கது.
இந்த நிலையில், தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 4 வரை தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
செப்டம்பர் 4-ஆம் தேதிக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களில் இந்த மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக