நாமக்கல்: காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கவுன்சலிங்கை புறக்கணிப்பு செய்து, திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், நாமக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்டத்தில் உள்ள, 39 காலிப்பணியிடங்களுக்களில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டத்துக்குள் இடமாறுதல் கவுன்சிலில் நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் தலைமை வகித்தார்.
அதில், தமிழ், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், ஒன்பது காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டாக புகார் எழுந்தது. அதனால், அதிர்ச்சி அடைந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 100க்கும் மேற்பட்டோர், கவுன்சிலிங்கை புறக்கணிப்பு செய்து, கவுன்சலிங் நடந்த அறை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதியம், 1 மணிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், ஆசிரியர்களை சமாதானம் செய்தார். அதை தொடர்ந்து, 2 மணிக்கு கவுன்சலிங்கில் கலந்து கொண்டனர். இச்சம்பவம், நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கூறியதாவது: காலையில் கம்ப்யூட்டர் திரையில் காலியிடங்களாக அறிவிக்கப்பட்ட பணியிடங்கள், கவுன்சலிங்கிற்கு முன் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்ட காலிப்பணியிட பட்டியலில் மறைக்கப்பட்டுள்ளது. அவற்றை தவிர்த்து, அனைத்து இடங்களுக்கும் முறையாக கவுன்சலிங் நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸிடம் கேட்டபோது, ""எந்த காலியிடமும் மறைக்கப்படவில்லை; பாடவாரியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் கவுன்சலிங் நடத்தப்பட்டது. அதில், 17 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக