லேபிள்கள்

23.8.15

இன்று சிவில் சர்வீஸ் தேர்வு: 9.45 லட்சம் பேர் எழுதுகின்றனர்

யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடக்கிறது. 71 நகரங்களில் உள்ள, 2,000 தேர்வு மையங்களில், 9.45 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதவுள்ளனர். கடந்த 2011ல், சிவில் சர்வீஸ் தேர்வில், 'சிசாட்' என்ற திறனறி தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. 

இது, ஆங்கில வழி மாணவர்களுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தங்களுக்கு தேர்வு எழுத மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என, பல தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, 2011ல் விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும், இந்த முறையும் தேர்வெழுத மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வின் முதல் நிலை தேர்வு, இன்று நடக்கிறது. நாடு முழுவதும், 9.45 லட்சம் பேர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள், www.upsc.gov.in என்ற இணையதளத்தில், அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக