லேபிள்கள்

28.8.15

பி.எட். கலந்தாய்வு: செப்.3 முதல் விண்ணப்ப விநியோகம்?

'தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது. 


தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லுாரி கல்வி இயக்ககம் நேற்று அறிவித்தது. இதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான, பி.எட்., படிப்பில், ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 3ம் தேதி முதல், 10ம் தேதி வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவரங்களை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக