லேபிள்கள்

24.8.15

மாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு.

பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, கூடுதலாக தேவைப்படும் மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை மத்திய அரசு வழங்க மறுப்பதால், மாநிலங்களின் மதிய உணவு திட்டம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், பல நேரங்களில், மானிய சிலிண்டர் மட்டும் உணவு தயாரிக்க போதுமானதாக இருப்பதில்லை. இதனால், சந்தை விலையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் வாங்கப்படுகின்றன.அவற்றிற்கான பணத்தை, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு திரும்ப வழங்கி வந்தது.

கடந்த ஏப்ரல் முதல், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், 'மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை தர முடியாது' என தெரிவிக்கப்பட்டது. செலவினங்களை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, மாணவர்களுக்கு போதுமான உணவு தயாரிக்க முடியாத நிலையை ஏற் படுத்தி விடுவ தால், உன்னதமான மதிய உணவு திட்டம் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, மாநில அரசுகள் கருதுகின்றன.இதுகுறித்து, அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையிலான, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் அருண் ஜெட்லி தலைமையிலான நிதித் துறைக்கு கடிதம் எழுத மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

மதிய உணவு திட்டம் :
* நாடு முழுவதும், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 10 கோடி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

* இதற்கான செலவில், 90 சதவீதத்தை, வட கிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. பிற மாநிலங்களுக்கு, 75 சதவீத செலவுத்தொகையை வழங்குகிறது.

* 2014 - 15ல், 13 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. நடப்பு நிதியாண்டில், 9,000 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளது. மதிய உணவு திட்டத்தில், பீகாரில், 1.38 கோடி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். எவ்வித முறைகேடுகளும் நடைபெறாத வகையில் திறம்பட நடத்தி வருகிறோம். இந்நிலையில், மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை வழங்க மத்திய அரசு மறுப்பதால், மாற்று முறைகளை நாட வேண்டியிருக்கும். அதனால் குழப்பங்கள் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக