கரூர் குமரன் உயர்நிலைப்பள்ளியில் நடந்த கலந்தாய்வை, கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் புறக்கணித்ததாக கூறி, ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு யூனியன்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், ஒன்றியத்துக்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு, கரூர் குமரன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் அனைத்து சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களை தரக்குறைவாக பேசிய, தேவர்மலை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமியை கண்டித்து, ஆர்ப்பாட்டம் மற்றும் கலந்தாய்வு புறக்கணிப்பு செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் பணியாற்றும், எட்டு யூனியன்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், நேற்று காலை முதலே, கரூர் குமரன் உயர்நிலைப்பள்ளிக்கு வந்தனர்.
அப்போது, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி, டி.இ.ஓ., கண்ணகி ஆகியோர் மட்டும் பள்ளியில் இருந்ததாகவும், கலந்தாய்வு செய்யும் அதிகாரிகள் இல்லை என்று, ஆசிரியர் சங்க, நிர்வாகிகள் தலைமையில் தனித்தனியாக குற்றம்சாட்டினர்.
ஆசிரியர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இணை இயக்குனர் குப்புசாமி, டி.இ.ஓ., கண்ணகி அமர்ந்திருந்த அறையை முற்றுகையிட்டு, அறை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, 12.30 மணிக்கு, கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள், பள்ளிக்கு வந்து, ஆசிரியர்கள் போராட்டம் நடத்த எவ்வாறு அனுமதி வழங்கினர், என போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., பெரிய்யய்யா பேச்சுவார்த்தை நடத்திய பின், கலைந்து சென்றனர்.
இதற்கிடையில், ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்களுடன், போலீஸார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின், போராட்டத்தை கைவிட்டு, கலந்தாய்வில் பங்கேற்பதாக அறிவித்தனர்.
அப்போது, மற்றொரு ஆசிரியர் சங்க நிர்வாகிகள், இணை இயக்குனர் குப்புசாமியிடம் சென்று, அரசு விதிமுறைப்படி கலந்தாய்வு நடத்த வேண்டும், என பிரச்னை எழுப்பியதால், மீண்டும் பிரச்னை உருவானது. அரை மணி நேரம் நடத்த பேச்சு வார்த்தைக்கு பின், எவ்வித முறைகேடும் இல்லாமல், கலந்தாய்வு நடத்தப்படும், என இணை இயக்குனர் குப்புசாமி உறுதி அளித்ததின் பேரில், நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.
இணை இயக்குனர் குப்புசாமி கூறுகையில்,""கலந்தாய்வு நடத்துவற்காக, காலை, 9.45 மணிக்கு, நான் வந்து விட்டேன். அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்காமல், புறக்கணிப்பு செய்தனர்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக