லேபிள்கள்

26.6.17

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, முன்னதாக நடத்துவது பற்றி, சி.பி.எஸ்.இ விளக்கம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, ஒரு மாதத்துக்கு முன் நடத்துவது பற்றி, எந்த முடிவும் எடுக்கவில்லை' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில், ஆண்டுதோறும், மார்ச், ஏப்ரல் மாதங்களில், 10ம் வகுப்பு, மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
தேர்வு முடிவுகளை, மே மாதத்துக்குள் அறிவிக்க வேண்டியுள்ளதால், தேர்வுத் தாள்களை, வேகமாக திருத்த வேண்டிய அவசியம், ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது.

தேர்வுத் தாள்களை மிக கவனமாக திருத்தி, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த, சி.பி.எஸ்.இ., யோசித்தது. இதற்காக, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, பிப்ரவரி மாதத்தில் நடத்துவது பற்றி ஆலோசித்து வருகிறது. இதற்கு, பல பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, பிப்ரவரி மாதத்திலேயே நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை; இது பற்றி ஆசிரியர்கள் உட்பட சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டு, அனைவரின் 
ஒப்புதலுடன்தான் முடிவு எடுக்கப்படும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக