லேபிள்கள்

27.6.17

அரசு பள்ளிகளில் அரசு ஆசிரியர் குழந்தைகள்: ஐகோர்ட் கேள்வி

அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஏன் உத்தரவிடக்கூடாது என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

பந்தநல்லூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழி கொண்டு வர அரசிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


வழக்கை விசாரித்த ஐகோர்ட் கூறியதாவது:ஆசிரியர் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்க கூடாது. ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக்கூடாது. 


அரசு பள்ளியில் சேர்க்காமல் பெரும்பாலானோர் ஏன் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். உரிய நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அரசு பள்ளி ஆசிரியர்கள் வருகையை சிசிடிவி கேமரா கொண்டு கண்காணிக்காதது ஏன்?

ஆசிரியர்கள் தங்களது கடமையை செய்யாவிடில் மாணவர்களை யாரும் காப்பாற்ற முடியாது.கிராம மலைப்பகுதி ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றனர். 


2012 அரசாணைப்படிஎத்தனை அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது. ஆங்கில வழி கல்வி எனில், தமிழில் பாடம் நடத்துபவர்கள் ஆங்கிலத்திலும் நடத்துவார்களா? 

2012 முதல் எத்தனை மாணவர்கள் ஆங்கில வழியில் படிக்கின்றனர் எனக்கேள்வி எழுப்பி, 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக