கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர, விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல், நேற்று வெளியானது. அதில், கால்நடை படிப்பு பாடப்பிரிவில், முதல் மூன்று இடங்களை, பெண்கள் பெற்றுள்ளனர்.
15,363 பேர் : தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு, துணைவேந்தர், எஸ்.திலகர் கூறியதாவது: கால்நடை பல்கலையில், ஐந்து பாடப்பிரிவுகளில் சேர, ஆன்லைனில், 23 ஆயிரத்து, 21 விண்ணப்பங்கள் வந்தன. அவர்களில், 21 ஆயிரத்து, 339 பேர், அதை பிரதி எடுத்து, அஞ்சல் மூலமாகவும், நேரிலும் சமர்ப்பித்தனர். அதன்படி, பி.வி.எஸ்சி., கால்நடை படிப்பில் சேர, 15 ஆயிரத்து, 363 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில், முதல், 10 இடங்களில், முதல் மூன்று இடங்களை, பெண்கள் பெற்றுள்ளனர்.மேலும், ராமநாதபுரம் - ஆர்.எஸ்.கிருத்திகா, தர்மபுரி - சவுமியா, ஆர்த்தி, ஈரோடு - கவின்ராஜ், திண்டுக்கல் - ராதாகிருஷ்ணன் ஆகியோர், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண்கள்
பெற்று, முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளனர்.
53.43 சதவீதம் : இது தவிர, பி.வி.எஸ்சி., கால்நடை தொழிற்நுட்ப பிரிவுக்கு, 157 பேர்; உணவு தொழிற்நுட்பம், 2,347; கோழியின வளர்ச்சி பிரிவு, 1,094; பால்வள தொழிற்நுட்ப பிரிவில் சேர, 1,865 பேர் என, மொத்தம், 20 ஆயிரத்து, 826 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில், 53.43 சதவீதம் பேர் பெண்கள். 45.71 சதவீதம் பேர், முதல் தலைமுறை பட்டதாரிகள்.இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள வர்களின் மதிப்பெண் விபரம், இணையதளத்தில் வெளியிடப்படும்.
கவுன்சிலிங் பற்றிய விபரங்களை, tanuvas.ac.in மற்றும் www.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் அறியலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக