செய்யூர் அடுத்த, சிறுவங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கனிஷ்கா, திருக்குறளில் உள்ள, 1,330 குறள்களையும் ஒப்புவித்து, சாதனை படைத்து வருகிறார்.
அரசு ஆரம்ப பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரியும், மகேஷ்பாபு என்பவரின் மகள் கனிஷ்கா. ஓராண்டாக ஆசிரியர் மூலமாக திருக்குறளை பயின்று வந்தார். தற்போது, 1,330 திருக்குறளை, 133 அதிகாரத்தில் எந்த அதிகாரத்திலிருந்து கேட்டாலும், உடனே சரளமாக ஒப்பிக்கிறார்.மேலும், மாவட்ட அளவில் சிறுவர்களுக்கான, திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில், 100க்கும் மேற்பட்ட சான்றுதழ்கள், பதக்கங்களையுள் பெற்றுள்ளார்.
இதுகுறித்து, கனிஷ்காவிற்கு திருக்குறள் பயிற்றுவித்த, தமிழ் ஆசிரியர் எல்லப்பன் கூறியதாவது:பள்ளி நேரங்கள் தவிர்த்து காலை, மாலை நேரங்களில், திருக்குறள் கற்று கொடுப்பேன். இதுவரை, 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, திருக்குறள் பயிற்சி அளித்து வருகிறேன். 5 வயதிலேயே திருக்குறளை சரியாக ஒப்புவிக்கும் குழந்தை, இவள் தான்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக