லேபிள்கள்

1.7.17

4,100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நாளை மறுநாள் பதிவு துவக்கம்

'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில், 4,100 எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்களுக்கு, ஜூலை, 3 முதல், 'ஆன்லைனில்' விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில், ௪,௧௦௦ எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்காக, 'நீட்' தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தனியாக தரவரிசை நிர்ணயிக்கப்படும். இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்குக்கு, நாளை மறுநாள் முதல், www.mcc.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் பதிவு துவங்குகிறது; ஜூலை, 11 வரை பதிவு செய்யலாம். தகுதியான மாணவர்களுக்கான விருப்ப கல்லுாரிகளின் நிலை குறித்து, ஜூலை, 12ல் பதிவு செய்யலாம். ஜூலை, 13ல், முதல்கட்ட கவுன்சிலிங்கில் ஒதுக்கீடு துவங்கும். இது, மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடக்கும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 1ல் துவங்கி, 16ல் 
முடியும். காலியாகும் இடங்கள், ஆக., 16ல், மாநில ஒதுக்கீடுக்கு வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்பில், ௩,௮௧௮ இடங்களும், பி.டி.எஸ்., படிப்பில், ௩௦௨ இடங்களும் நிரப்பப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக