நீட்' தரவரிசை பட்டியலின்படி மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு, மவுசு அதிகரித்துள்ளது.
'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துளளது. அதனால், பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்' மதிப்பெண்கள் மட்டுமே, மருத்துவ இடங்களுக்கு உதவாது. 'நீட்' தேர்வு மதிப்பெண் அதிகமாக இருந்தால் மட்டுமே, தர வரிசையில் முன்னிலை பெற்று, அரசு ஒதுக்கீடு பெற முடியும். தமிழக அரசின் புதிய முடிவின்படி, பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கான மவுசு குறைந்து, 'நீட்' மதிப்பெண்ணுக்கான மவுசு அதிகரித்துள்ளது.
பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகத்தினரும், தனியார் பள்ளி மாணவர்களும், பிளஸ் 2 சிறப்பு பயிற்சிகளை குறைத்து, 'நீட்' தேர்வுக்கான பயிற்சிக்கு, முன்னுரிமை அளிக்க துவங்கி உள்ளனர். அதனால், தனியார் பள்ளிகளிலேயே நேரடியாக, 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகள் துவங்கி உள்ளன. அதேபோல, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களுக்கு, கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது. பல புதிய பயிற்சி மையங்களும், சாதாரண டியூஷன் மையங்களும், 'நீட்' தேர்வு பயிற்சிக்கு தயாராகி உள்ளன. பயிற்சிக்கான கட்டணம், ஓர் ஆண்டுக்கு, 20 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக