லேபிள்கள்

26.6.17

புதிய கல்விக்கொள்கை வரைவுக்கு விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய குழு*

*புதிய கல்விக்கொள்கை வரைவுக்கு விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய குழு*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
புதிய கல்விக்கொள்கை வரைவுக்காக, இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும்,
திட்டக்குழு முன்னாள் உறுப்பினருமான கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 

*கல்விக்கொள்கை*

2015-ம் ஆண்டு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு, தனது அறிக்கையைக் கடந்த ஆண்டு மத்திய அரசின் மனிதவளத்துறையிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை மூலம் கல்வியாளர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டது. 

இதில், சில கொள்கைகளுக்கு சில மாநில அரசுகளும், கல்வியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதனால், மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதிய கல்விக்கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்குப் புதிய குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். 

தற்போது, _விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் எட்டுப் பேர் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது._

       ______TNGTF________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக