சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 9ம் வகுப்பில், 42 மாணவர்கள் தக்க வைக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவுக்கு பதில் அளிக்கும்படி, பள்ளி நிர்வாகம் மற்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த, சந்தோஷ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு:என் மகன், சென்னை, ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் படித்து வருகிறான். 2016 - 17ம் கல்வி ஆண்டில், 9ம் வகுப்பு முடித்துள்ளான். இந்த ஆண்டு, 10ம் வகுப்புக்கு செல்ல வேண்டும். ஆனால், என் மகனுடன் சேர்த்து, 42 மாணவர்களை, அதே வகுப்பில் தக்க வைத்து, மீண்டும், 9ம் வகுப்பு படிக்கும்படி கட்டாயப்படுத்திஉள்ளனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 வரை, எந்த வகுப்பிலும் தக்க வைக்காமல், மாணவர்களை அனுப்ப வேண்டும் என, சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது. அதற்கு முரணாக, 42 மாணவர்களை, 9ம் வகுப்பில் தக்க வைத்துள்ளனர்.அதே வகுப்பில், 141 மாணவர்கள் படித்துள்ளனர். இவர்களில், 35 சதவீத மாணவர்கள், 9ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அப்படியென்றால், பள்ளி நிர்வாகத்தில் தவறு உள்ளது என்பது நிரூபணமாகிறது.
இந்த, 42 மாணவர்களின் உண்மையான தகுதியை கண்டறிய, மீண்டும் அவர்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும். அந்த தேர்வை வேறு பள்ளியில் நடத்தி, அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, கேந்திரிய பள்ளி நிர்வாகம் மற்றும் சி.பி.எஸ்.இ., நிர்வாகத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக