லேபிள்கள்

28.6.17

டிப்ளமா ஆசிரியர் பயிற்சி ,விண்ணப்பிக்க இன்று கடைசி

பள்ளிக் கல்வித்துறை நடத்தும், 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.
பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தில், 463 கல்லுாரிகளில், 13 ஆயிரம் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு, www.tnscert.org என்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' வாயிலாக, மாணவர் சேர்க்கை பதிவு, மே, 31ல் துவங்கியது.இந்த பதிவு, இன்றுடன் முடிகிறது. இதுவரை, 1,600 பேர் மட்டுமே, டிப்ளமா படிப்பில் சேர, பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக