வால்பாறை அருகே, ஒரே ஒரு மாணவியை மட்டும் நம்பி, ஒரு ஆசிரியருடன், அரசு பள்ளி, இயங்கி வருகிறது.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா. இங்குள்ள, சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில், 1948 முதல் அரசினர் ஆதிதிராவிட நலப்பள்ளி துவங்கப்பட்டு செயல்படுகிறது. ஆரம்பத்தில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்தனர்.இந்த கல்வியாண்டில், பள்ளியில், மூன்றாம் வகுப்பில், கீர்த்திகா என்ற ஒரே ஒரு மாணவி மட்டும் படிக்கிறார். இவருக்கு பாடம் நடத்த கற்பகசெல்வி என்ற ஆசிரியர் மட்டும் உள்ளார். ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து ஆகிய வகுப்புகளில் மாணவர்களே கிடையாது.
ஒரு மாணவிக்காக, சத்துணவு மையமும் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டில், ஒரு மாணவர் கூட, பள்ளியில் சேரவில்லை. இதனால், சின்னக்கல்லார் அரசுப்பள்ளி மூடப்படும் நிலையை நோக்கி செல்கிறது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சின்னக்கல்லார் பகுதியிலிருந்து எஸ்டேட் தொழிலாளர் குடும்பங்கள், சமவெளிப்பகுதிக்கு குடியேறி விட்டன. பள்ளி அமைந்துள்ள பகுதியில், 34 வீடுகள் மட்டுமே உள்ளன. அங்குள்ள பல குழந்தைகள், வால்பாறையிலுள்ள தனியார் மற்றும் அரசுப்பள்ளிக்கு செல்கின்றனர். 'பள்ளி மூடப்படும் நிலையில் உள்ளது குறித்து மக்களிடையே தெரிவித்து, மாணவர் சேர்க்கைக்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக