லேபிள்கள்

28.6.17

மருத்துவ படிப்புக்கு முதல் நாளில் 8,379 விண்ணப்பம் வினியோகம்

மருத்துவ படிப்பு களுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கிய முதல் நாளில், 8,379 விண்ணப்பங்கள் விற்பனையாகின. 

தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான, விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. அரசு மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்கள், பெற்றோர்கள் வரிசையில் காத்திருத்து, விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரிகளில், 1,550 விண்ணப்பங்களின் வினியோகம் நடந்தது. கூட்டம் காரணமாக, மாலை, 6:00 வரை வினியோகம் நடந்தது.
நேற்று ஒரே நாளில், 8,379 விண்ணப்பங்கள் விற்பனையாகின. வரும், ஜூலை, 7 வரை, அரசு மருத்துவ கல்லுாரிகளில் விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்ப கட்டணம், 500 ரூபாய்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, விண்ணப்ப கட்டணம் கிடையாது.

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், ஏற்கனவே உள்ள பிரிவு வாரியான இட ஒதுக்கீடு தொடரும். மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கான ஒதுக்கீடு, 3 சதவீதத்தில் இருந்து, 4 சதவீதமாக உயர்த்தப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக