லேபிள்கள்

4.9.17

உள்ளாட்சி தேர்தலை நவ.,17 ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக உள்ளாட்சி தேர்தலை நவ.,17 ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்., மாதம் நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல், தி.மு.க.,வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, பாடம் நாராயணன் ஆகியோர் தொடர்ந்த வழக்கால் தள்ளி போனது. பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக் காட்டி இந்த வழக்கு தொடரப்பட்டு வந்தது. 
தொடர்ந்து விசாரணையில் இருந்த இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை, செப்., 18 ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். தேர்தலை, நவ., 17 ம் தேதிக்குள் நடத்த வேண்டும். வேட்பாளர்களின் குற்ற பின்னணி குறித்த தகவல்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும். 
இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக