லேபிள்கள்

5.9.17

குறைந்த எண்ணிக்கையில் மாணவர் 70 பி.யூ.சி., கல்லூரிகளை மூட முடிவு

 குறைவான மாணவர்கள் படிக்கும், 70 பி.யூ.சி., கல்லுாரிகளை மூட, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 'அடிப்படை வசதி இல்லாத மற்றும் குறைவான எண்ணிக்கையில் மாணவர் படிக்கும், 800 பொறியியல்
கல்லுாரிகள் மூடப்படும்' என, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் தலைவர், அனில் தத்தாத்ரேயா அறிவித்திருந்தார். 
இந்நிலையில், தரமற்ற கல்வி, மாணவர் சேர்க்கை குறைவு, அறிவியல் பரிசோதனை மையம் குறைபாடு என, பல காரணங்களை கூறி, கல்லுாரிகளை மூட, கல்வித்துறை பட்டியல் தயாரித்துள்ளது. மாநிலத்திலுள்ள, 311 பி.யூ.சி., கல்லுாரிகளில், 1,357 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். இவர்களை மற்ற கல்லுாரிகளுக்கு இடமாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக, அக்டோபரில் கவுன்சலிங் நடத்தப்படுகிறது. சமீபத்தில், அறிவியல் பிரிவில், பல புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த பாடத்திட்டம் குறித்து, மாணவர்களிடையே அரசு, விளம்பரப்படுத்தவில்லை. இதனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
அரசு பள்ளி, கல்லுாரிகளை மூடக்கூடாது என்று பல தரப்பிடமிருந்து அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் வந்தாலும், தற்போது, 70 பி.யூ.சி., கல்லுாரிகளை, மூட அரசு முடிவு செய்தது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து, 
பி.யூ.சி., கல்வி துறை இயக்குனர் ஷிகா கூறியதாவது:
மாணவர்களின் எண்ணிக்கை, பாடத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தபோது, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடத்திட்டத்துக்கு, சில கல்லுாரிகளில், மூன்று, நான்கு மாணவர்கள் மட்டுமே உள்ளனர். சில கல்லுாரிகளில், ஒருவர் கூட இல்லை. 
இந்த கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை, தேவைப்படும் கல்லுாரிகளுக்கு மாற்றுவதற்காக, கவுன்சலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
மாணவர்களே இல்லாமல் உள்ள கல்லுாரிகளை, மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக