லேபிள்கள்

3.9.17

800 இன்ஜி., கல்லூரிகளை இழுத்து மூட முடிவு

''அடிப்படை வசதிகள் இல்லாத மற்றும், 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிக்கும், 800 பொறியியல் கல்லுாரிகள்
மூடப்படும்,'' என, ஏ.ஐ.சி.டி.ஐ., தலைவர், அனில் தத்தாரேயா, அதிரடியாக அறிவித்துள்ளார்.கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், ஏ.ஐ.சி.டி.ஐ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர், அனில் தத்தாரேயா பேசியதாவது:

ஏ.ஐ.சி.டி.ஐ., அமல்படுத்திய கடுமையான விதிமுறைகளால், ஆண்டுக்கு, 150 பொறியியல் கல்லுாரிகள் தானாகவே மூடப்பட்டு வருகின்றன. வசதி இல்லை
கவுன்சில் விதிமுறைப்படி, தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை, 30 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தாலோ அல்லது அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தாலோ அத்தகைய கல்லுாரிகளும் மூடப்படவேண்டும்.இந்நிலையில், 2014 - 18 வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும், 410 பொறியியல் கல்லுாரிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது; இதில், கர்நாடகாவின் 20 கல்லுாரிகளும் அடங்கும்.
தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் என, பல்வேறு மாநிலங்களில் செயல்படும், 800 கல்லுாரிகளில் முறையான வசதிகள் இல்லாததாலும், தரமான கல்வி வழங்காததாலும், மாணவர்களின் வருகையும் குறைந்து வருவதாலும், அவற்றை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

6 மாத பயிற்சி

மூடப்படும் கல்லுாரிகள், பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்றப்படலாம். பல பொறியியல் கல்லுாரிகளில் விரிவுரையாளர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை. புதிய விதிமுறைகளின்படி, விரிவுரையாளர்கள் ஆறு மாதம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். நவீன கல்வி முறையையும் அறிந்திருக்க வேண்டும். நேர்முக 
வேலை வாய்ப்பு வழங்கும் தகுதிகளை, கல்லுாரிகள் பெற்றிருத்தல் வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக