பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்ற தமிழ்நாடு
அரசுப்பணியாளர்கள் 250 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவேண்டும். தமிழ்நாட்டில் 8-வது ஊதியக்குழு அமல்படுத்தப்படும் வரை கடந்த 2016 ஜனவரி 1-ந்தேதி முதல் இடைக்கால நிவாரணமாக 25 சதவீதத்தை வழங்குதல். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளர்களை ஊதியக்குழுவின் வரம்பிற்குள் கொண்டு வந்து நிரந்தர ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் செப்டம்பர் 4-ந்தேதி (நேற்று) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இருந்து கோட்டை நோக்கி பேரணியாக சென்று கோட்டை முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை மற்றும் கோட்டை ஆகிய இடங்களில் நேற்று போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இருப்பினும் திட்டமிட்டபடி தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கூடினர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அனுமதி இன்றி பேரணி செல்ல முயன்றதாக கூறி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாநில தலைமை நிலையச் செயலாளர் சா.ஜான்சன் சத்யராஜ், சென்னை மாவட்ட தலைவர் ராஜன், மாவட்ட செயலாளர் தொல்காப்பியன் உள்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், மாநில சட்ட ஆலோசகர் கு.பால்பாண்டியன், மாநில தலைவர் பி.கே.சிவகுமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
எங்களுடைய போராட்டங்களின் விளைவாக ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
போராடி போராடி அரசு பணியாளர்களுக்கு சலுகைகளை பெற்றுத்தந்த சங்கம் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம். எங்களுடைய தற்போதைய 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.
இன்று தொடங்கி இருக்கும் பேரணி மற்றும் மறியல் போராட்டம் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். 7-ந்தேதி முதல் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளது.
7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக