லேபிள்கள்

8.9.17

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் தடையை மீறி மறியல்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும், 7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டது.அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் மாநில அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பிய அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டு கைதானார்கள்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு பகுதியினர் மட்டும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் பெரும்பாலான அலுவலகங்கள் செயல்பட்டன.

சென்னையில் எழிலகம் வளாகத்தில் உள்ள அரசின் பல்வேறு துறை அலுவலக பணிகள் ஊழியர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்டன. அரசு ஊழியர் சங்கங்களும் ஒரு சில ஆசிரியர் சங்கங்களும் இந்த போராட்டத்தை முன் எடுத்து செல்கின்றன.
ஜாக்டோ - ஜியோவின் மற்றொரு பிரிவினர் முதல்- அமைச்சரின் வேண்டு கோளை ஏற்று அக்டோ பர் 15-ந்தேதி வரை போராட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.இந்த நிலையில் அரசு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்திற்கு ஐகோர்ட்டு மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. ஊழியர்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராடுவது அடிப்படை உரிமை ஆகாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் அறிவுரையையும் எடுத்துரைத்துள்ளது.

இதற்கிடையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைநகரங்களில் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக கோரிக்கை கோ‌ஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி தலைமை செயலாளர் அழைப்பு விடுத்தும் அதனை ஏற்காமல் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் அருகில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன் ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொணடனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக