லேபிள்கள்

3.9.17

பள்ளிகளில் 'ஹைடெக்' மாற்றம் ரூ.300 கோடியில் அதிரடி திட்டம்

 கேரள மாநில அரசின், கல்வித்துறை சார்பில், செயல்படுத்தப்படும், கேரள மாநில கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திட்டத்துக்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், லேப் - டாப், மல்டிமீடியா புரொஜக்டர்களை வாங்க, இணையவழி, 'டெண்டர்' எனப்படும், ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில், மு தல்வர், பினராயி விஜயன் தலைமையில், மார்க். கம்யூ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலம் முழுவதும், 4,775 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பறைக்கும், லேப் - டாப், மல்டிமீடியா புரொஜக்டர், மின்னணுவியல் வெண்பலகை, ஒலிக்கருவிகள் வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது.
இது, கேரள மாநில அரசின், கல்வித்துறை சார்பில், கே.ஐ.டி.இ., எனப்படும், கேரள மாநில கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. 
இதற்காக, 300 கோடி ரூபாய் மதிப்பில், 60 ஆயிரத்து, 250 லேப் - டாப்கள், 43 ஆயிரத்து, 750 மல்டிமீடியா புரொஜக்டர்கள் பெறுவதற்கு, கேரள அரசின் இணையதளத்தில், 'டெண்டர்' அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டர் மூலம், யு.பி.எஸ்.,கள், ஹெச்.டி., திறன் கேமராக்கள், எல்.சி.டி., 'டிவி'க்களும் வாங்கப்பட உள்ளன. 
இவை, பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப, தகவல் தொடர்பு ஆய்வுக்கூடம் அமைக்க பயன்படுத்தப்படும்.
கல்வித்துறைக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக