வரும் 15ல் நடக்கும் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியின்போது, தபால் ஓட்டுப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.அனைத்து கட்சி பிரதி நிதிகளுடனான ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் கோவிந்தராஜ் பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 176 பேர், ஓட்டுப்பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டல தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பணியாளர்கள், போலீசார், டிரைவர் என பலரும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக, தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள், முன்கூட்டியே தபால் ஓட்டுக்களை பதிவு செய்கின்றனர். இருப்பினும், தபால் ஓட்டு சதவீதம் குறைவாக இருக்கிறது.
படிவம் 12 மற்றும் 12ஏ மூலமாக, தேர்தல் பணியாளர்களின் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. வரும் 15ல் நடக்கும் கூட்டத்தில், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்படும் தொகுதி விவரம் தெரியவரும். வேறு தொகுதியில் பணியமர்த்தப்பட்டால், தபால் ஓட்டு மூலம், தங்கள் தொகுதி வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேவையான "பேலட் சீட்', உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் உள்ளது. வரும் 15ல் நடக்கும் கூட்டத்தில், 13ஏ, 13பி மற்றும் 13சி படிவங்கள் வழங்கப்படும். 13பி படிவத்தில் உள்ள அட்டவணையில் ஓட்டுப்பதிவு செய்து, <உரையை மூடி, மற்ற படிவங்களுடன் சேர்த்து, பெரிய கவரில் வைத்து, உயரதிகாரிகள் முன்புள்ள ஓட்டுப்பெட்டியில் போட வேண்டும். அப்பெட்டி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பாதுகாக்கப்படும். ஓட்டுப்பதிவு அலுவலர்கள், சொந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு இ.டி.சி., (எலக்ஷன் டியூட்டி சர்டிபிகேட்) வழங்கப்படும். அதை பயன்படுத்தி, எந்த ஓட்டுச்சாவடியில் வேலை செய்தாலும், அந்த ஓட்டுச்சாவடியில், தங்களது ஓட்டை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக