லேபிள்கள்

8.4.14

அறிவியல் கேள்வித்தாளில் பிழை : "சென்டம்' குறைய வாய்ப்பு- அறிவியல் ஆசிரியர்கள் கருத்து

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு கேள்வித்தாளில் பிழைகள் காரணமாக, "சென்டம்' குறைய வாய்ப்பு உள்ளதாக, அறிவியல் பாட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ம் தேதி துவங்கியது. நேற்று நடந்த, அறிவியல் தேர்வில், இரு கேள்விகளில், பிழை மற்றும் குழப்பம் இருந்ததால், மாணவர்கள் பதிலளிக்க சிரமப்பட்டதாகவும், இதனால், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை சரியும் எனவும், அறிவியல் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அறிவியல் பாட ஆசிரியர் கண்ணன் கூறியதாவது: ஒரு மதிப்பெண் பிரிவில், 14ம் கேள்வி, மாணவர்களுக்கு குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தகத்தில் தவறான பதில் இருப்பதே, இதற்கு காரணம்.
இரண்டு மதிப்பெண் பிரிவில், 29ம் கேள்வியில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் யாவை என, தமிழில் கேட்கப்பட்டுள்ளது; ஆனால், ஆங்கிலத்தில், " பயோ பியூல்' என, கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டிற்கும் அர்த்தங்கள் வேறு; தமிழில், "உயிரி எரிபொருள்' என, கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். இதனால், தமிழ் வழி மாணவர்கள் பொதுவான பதிலை எழுதியுள்ளனர். இரு கேள்விகளில் உள்ள குழப்பங்களால், சென்டம்' குறைய வாய்ப்புள்ளது. அரசு தேர்வுத்துறை, இ தற்கான மதிப்பெண்களை வழங்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக