லேபிள்கள்

12.4.14

மாணவர்கள் எண்ணிக்கை விபரம் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கை பள்ளிகள் அறிவிக்க உத்தரவு

மாணவர் சேர்க்கையில் நலிந்த பிரிவினருக்கு 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை பள்ளியின் அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.   
தமிழகத்தில், இடஒதுக்கீடு குறித்த அரசாணையை பள்ளி கல்வி துறை வெளியிட்டது. இதில், குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அரசு மானியம் பெறாத சிறுபான்மை பள்ளிகள் தவிர அனைத்து தனியார் சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. 
இது குறித்த அறிவிப்பை அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 2ம் தேதி தங்களின் அறிவிப்பு பலகையில் பொதுமக்கள் பார்க்கும்படி வெளியிட வேண்டும். இந்த, 25 சதவீத இடஒதுக்கீட்டின் படி சேருவதற்கான விண்ணப்பங்கள் அனைத்து பள்ளிகளிலும் மே 2ம் தேதி முதல் மே 9ம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களை பூர்த்திசெய்து மே 9ம் தேதி மாலை 5 மணிக்குள் அந்தந்த பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான மற்றும் தகுதியற்ற விண்ணப்பங்கள் எவை என்ற பட்டியலை 11ம் தேதி மாலை பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். 
பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 சதவீத இடங்களுக்கு அதிகமாக விண்ணப்பங்கள் இருந்தால் ‘ரேண்டம்‘ முறையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். மாணவர்களுக்கான ரேண்டம் தேர்வு முறை மே 14ம் தேதி காலை 10.110 மணிக்கு நடைபெறும். இதில், தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் அன்று பிற்பகல் 2 மணிக்கு அப்பள்ளியின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். பெற்றோர்களும் மாணவர்களும் இதனை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 
இரண்டு லட்சம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் பெறும் எந்த இனத்தை சேர்ந்தவர்களும் நலிந்த பிரிவினரில் சேர்க்க தகுதியானவர்கள். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் தாய், தந்தையை இழந்தவர்கள் ஆகியோர் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் சேர்க்க தகுதியானவர்கள். நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
அரசு மானியம் பெறாத சிறுபான்மை பள்ளிகள் தவிர மற்ற அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். 

கே.ஜி வகுப்பு முதல் பிளஸ்2 வரை நுழைவு நிலை என்ன என்பது பற்றி அரசாணை 60ல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கி.மீ. தூரத்தில் வேறு ஒரு கே.ஜி பள்ளி இருந்தாலும் விண்ணப்பம் கொடுக்கலாம். அதேபோல் 11 கி.மீ. தூரத்திற்குள் வேறு ஒரு உயர்நிலைப்பள்ளி இருந்தாலும் விண்ணப்பம் கொடுக்கலாம். இடஒதுக்கீடு செய்யப்பட்ட 25 சதவீதம் இடங்களுக்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்தால் ரேண்டம் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக