லேபிள்கள்

11.4.14

தனியார் பள்ளிகளில் விதியை மீறி முன்கூட்டி விண்ணப்பம் விநியோகம்

திருச்சி மாவட்டத்தில் 197 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. அரசு பள்ளிகளின் மாண வர் சேர்க்கைக்காக பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அதில் மாணவர்களின் இடைநிற்றலை தடுத்திட உதவித்தொகை , சீருடை , புத்தகம் உள்ளிட்ட 14 வகையான இலவச பொருட்கள் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதுபோல அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி , 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள், கையேடு போன்றவற்றை செயல்படுத்தி வருகின்றது. மேலும் அரசுப் உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் அரசு இடைநிலைப்பள்ளிகளுக்கு விண்ணப்பங்களை வழங்குகின்றனர். அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மே  2வது வாரம் முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மே மாதம் இறுதி வாரத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 

அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார்பள்ளிகளும் 1 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மே மாதம் 2வது வாரம் தான் வழங்க வேண்டும் என்று பள்ளி  கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . ஆனால் விதியை மீறி இந்த மாதம் தொடக்கத்திலிருந்து திருச்சியில் பல தனியார் பள்ளி கள் 1 மற்றும் 6ம் வகுப்பிற் கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கி வருகின்றன. பெற்றோர் ஆர் வம் காட்டுவதால் , அவர்க ளின் ஆர்வத்தை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்று விதிமீறல்களில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து , பள்ளி களை தீவிரமாக கண்காணி க்க வேண்டும் என்று கல்வியாளர்களும் பெற் றோரும் வலியுறுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக