அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிதித்துறை நிதி ஒதுக்கீடு உத்தரவு இருந்தால் மட்டுமே சம்பளம் பெற முடியும், என கருவூலகத்துறை அறிவித்துள்ளதால் 35 ஆயிரம்
ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலையில் 636 ம், ஆயிரத்து 99 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்தப்பள்ளிகளில் ஆண்கள் 10 ஆயிரத்து 407 பேரும், 24 ஆயிரத்து 417 பெண் ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான சம்பளபில் தயாரிக்கப்பட்டு கருவூலகத்துறையில் ஒப்புதல் பெறப்பட்ட பின்பு இவர்களது வங்கி கணக்கில் இ.சி.எஸ்., முறையில் பணம் வழங்கப்பட்டு வந்தது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக நிதித்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்கப்படும். இந்த உத்தரவு இல்லாமல், இது வரை கருவூலகத்துறை சம்பள் வழங்கி வந்தது. அந்த உத்தரவு பெற்ற பின் அதைனை கருவூலகத்துறை பெற்று கொள்ளும். அடுத்த மாதம் முதல் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்திற்கு நிதி ஒதுக்கீட்டு உத்தரவினை சம்பள பில்லுடன் சமர்ப்பிக்க வேண்டும், அப்போது தான் சம்பள பில்லுக்கு ஒப்புதல் வழங்கப்படும், இல்லை என்றால் சம்பள பில்லுக்கு ஒப்புதல் வழங்கப்பட மாட்டாது, என கருவூலகத்துறை உத்தரவிட்டுள்ளது. எப்போதுமே சம்பள நிதி ஒதுக்கீட்டு உத்தரவு தாமதமாகத்தான் வரும். இந்த உத்தரவு இல்லாமல், அடுத்த மாதம் 35 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேர்வு நிலை, சிறப்பு நிலையில் மூன்று சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீட்டு உத்தரவு இல்லாமல் உயர்வுத்தொகையை பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். தமிழக தழாசிரியர் கழக மாநிலை துணை செயலாளர் இளங்கோவன் கூறுகையில்,"" கருவூலகத்துறை புதிய நடைமுறையை அடுத்த மாதம் முதல் கடைபிடிக்க விருப்பதால், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்படும். இது வரை நிதி ஒதுக்கீட்டு உத்தரவை எதிர்பார்த்து கருவூலகத்துறை ஆசிரியர்கள் சம்பளத்திற்கு ஒப்புதல் வழங்கியது. நிதித்துறை ஒதுக்கீட்டு உத்தரவு கிடைக்கும் வரை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும், சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையும், நிதித்துறையும் நடவடிக்கை எடுத்து உரிய நேரத்தில் உத்தரவு வழங்கி ஆசிரியர்கள் சம்பளம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்,"" என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக