லேபிள்கள்

6.4.14

அடிப்படை சம்பளத்துடன் இதர படிகளை இணைக்க மத்திய அரசு தடை: பி.எப். சந்தாதாரர்களுக்கு பாதிப்பு

வருங்கால வைப்புநிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.), கடந்த 2012–ம் ஆண்டு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் இதர படிகள் அனைத்தும் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தது.
இதன்மூலம், தொழில் நிறுவனங்களில் பிடித்தம் செய்யப்படும் பி.எப். சந்தாதொகை உயர்வதுடன், தொழில் நிறுவனங்களும் அதே அளவு சந்தாதொகையை செலுத்த வேண்டி இருக்கும் என்பதால், தங்கள் கணக்கில் அதிகமான சேமிப்பு தொகை சேரும் என்று பி.எப். சந்தாதாரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயத்தில், தொழில் நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு, கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் நிலையும் காணப்பட்டது.
இந்நிலையில், அடிப்படை சம்பளத்துடன் இதர படிகளை இணைக்கும் யோசனையை செயல்படுத்த வேண்டாம் என்று இ.பி.எப்.ஓ.வை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால், பி.எப். சந்தாதாரர்களுக்கு அதிக சேமிப்பு தொகை கிடைக்கும் வாய்ப்பு பறிபோய் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக