லேபிள்கள்

8.4.14

பணியில் உள்ள இடத்திலேயே ஓட்டு : போலீசாருக்கு தேர்தல் கமிஷன் கரிசனம்

சிவகங்கை: தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்போடலாம்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், முதன்முறையாக,
அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "பார்ம் -12' படிவத்தை பூர்த்தி செய்து, எஸ்.பி., அல்லது போலீஸ் கமிஷனரிடம் ஒப்புகை பெற வேண்டும். உரிய நகலுடன் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து, ஒப்புகை சீட்டு பெற வேண்டும். இந்த ஒப்புகை சீட்டை காண்பித்து, பணியில் இருக்கும் சாவடிகளில் ஓட்டுப் பதிவு செய்யலாம். போலீசார் கூறுகையில், "கடந்த தேர்தல்களில், எங்கு பணி செய்தாலும் தபால் ஓட்டு அனுப்ப வேண்டும். தற்போது கொண்டு வரப்பட்ட மாற்றம் வரவேற்கத்தக்கது' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக