லேபிள்கள்

12.4.14

கல்வி உரிமை சட்ட மீறல்? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டம் மீறப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அந்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அந்த மனுவில், ""மத்திய அரசு கொண்டு வந்த கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்குத் தேவையான வசதிகள் இல்லாததால், கல்வியின் தரம் தாழ்ந்து வருகிறது. உரிய பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளித்து, தேவையான அளவில் அவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்'' என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான அமர்வு, ""மனுவில் குறிப்பிட்டுள்ள தகல்களைக் கொண்டு, கல்வி உரிமைச் சட்டம் மீறப்பட்டு வருவது தெளிவாக புலனாகிறது.
மத்திய அரசும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் கோடை விடுமுறைக்குப் பிறகு இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக