லேபிள்கள்

18.6.14

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு: ஹால் டிக்கெட் பெற மாற்று ஏற்பாடு - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் பெற முடியாத தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுத்துறை மாற்று ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் திங்கள் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் கலந்து கொள்ளாத தேர்வர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் ஜூன் 13 முதல் தேர்வுத் துறையின் இணைய தளத்தில் ஆன்லைனில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

மாற்று ஏற்பாடு

எனினும் சில தேர்வர்கள் தங்களுக்குரிய ஹால்டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை என தெரிவித்தனர். இதன் காரணமாக, அத்தகைய தேர்வர்கள் தாங்கள் தேர்வுக் கட்டணம் செலுத்திய பள்ளி அமைந் துள்ள மாவட்டகல்வி அதிகாரி அலுவலகத்தை உடனடியாக தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகி றார்கள். தேர்வுக் கட்டணத்தை பள்ளியில் செலுத்தி யதற்கு ஆதாரமாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து ‘தேர்வர் தேர்வுக்கட்டணம் செலுத்தி யுள்ளார் மற்றும் ஜூன், ஜூலை பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு எழுத தகுதியானவர்’ எனக்கடிதம் பெற்று மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் தேர்வர் சமர்ப்பித்த பிறகே ஹால்டிக்கெட் வழங் கப்படும்.

2 போட்டோ


தேர்வர்கள் பாஸ்போர்ட் அள வுள்ள 2 புகைப்படங்களை எடுத்து ஒன்றை ஹால்டிக்கெட்டில் ஒட்ட வேண்டும். மற்றொரு புகைப் படத்தை தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக