லேபிள்கள்

19.6.14

அண்ணாமலை பல்கலை மருத்துவ படிப்புக்கான 'ரேண்டம்' வெளியீடு

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மருத்துவம், பல் மருத்துவம், வேளாண் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான, 'ரேண்டம்' எண், நேற்று வெளியிடப்பட்டது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை
பல்கலைக் கழகத்தில், நடப்பு கல்வி ஆண்டிற்கு, மருத்துவம் - 150, பல் மருத்துவம் - 100, இன்ஜினியரிங் - 3,000, வேளாண்மை பிரிவு - 1,000, தோட்டக்கலைத் துறை - 75, பி.பார்ம் மற்றும் பி.எஸ்சி., நர்சிங் - 100 இடங்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. பல்கலையில், மருத்துவம், வேளாண்மை படிப்புகளுக்கு, 'ரேங்க்' பட்டியல் வெளியிடுவதற்கு, மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஒருங்கிணைப்பு வரிசைப்படுத்தும், 'ரேண்டம்' எண் வழங்கப்பட்டது. 'வரும் 20ம் தேதி, மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண்மை படிப்புகளுக்கு, ரேங்க் மற்றும் கவுன்சிலிங் பட்டியல் வெளியிடப்படும்' என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக