லேபிள்கள்

16.6.14

இப்படியும் ஒரு பள்ளி:மரத்தடியில் பாடம் - தினமலர் செய்தி

திண்டுக்கல், வடமதுரை அருகே கொம்பேறிபட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் மரத்தடி பாடம் படிக்கின்றனர்.

கொம்பேறிபட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, 2011ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 500 மாணவர்கள் படிக்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 472 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். அறிவியலில் ஐந்து மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றனர்.

இந்த பள்ளிக்கு கட்டட வசதிகள் இல்லை. இட நெருக்கடியால் ஆறு, ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. லேசாக மழை பெய்தாலும் விடுமுறை தான். கூடுதல் கட்டடம் குறித்து கல்வித்துறையினர் கண்டுகொள்ளவே இல்லை.

இதேபோல, தென்னம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மரத்தடி வகுப்பறை தான். கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான முயற்சிகளை, கல்வித்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக