லேபிள்கள்

19.6.14

முதல் நாளில் 595 பேருக்கு எம்.பி.பி.எஸ்., 'சீட்' ஒதுக்கீடு

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில், முதல் நாளில், 595 பேருக்கு எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு,
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று துவங்கியது. இதில், 600 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்; ஐந்து பேர் வரவில்லை. கலந்தாய்வில் பங்கேற்ற, 595 பேருக்கும், எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் பெரும்பாலான பிரிவுகளில், இடங்கள் நிரம்பிவிட்டன. நேற்று பங்கேற்ற யாரும், பி.டி.எஸ்., படிப்பை தேர்வு செய்யவில்லை. இன்று, பொதுப் பிரிவினருக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வு நடக்கிறது. இதில், பங்கேற்க, 900 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக