லேபிள்கள்

18.6.14

44 பேருக்கு எம்.பி.பி.எஸ்., இன்று பொதுப்பிரிவு கலந்தாய்வு

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில், 44 பேருக்கு எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 85 பி.டி.எஸ்., இடங்களுக்கு, கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்தது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படைவீரரின் குழந்தைகள் என, 110 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில், மாற்றுத்திறனாளிகள் 39; விளையாட்டு வீரர்கள் 2, முன்னாள் படை வீரர்கள் 3 பேர் என, 44 பேருக்கு, எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இன்று பொது கலந்தாய்வு: பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடக்கிறது. ''200க்கு, 200 'கட்ஆப்' மதிப்பெண் பெற்ற, 132 பேர் உட்பட, 600 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 'டாப் 10' இடங்களைப் பிடித்தோருக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர், இட ஒதுக்கீடு ஆணைகளை வழங்குவார்,'' என, மாணவர் சேர்க்கைசெயலர் சுகுமார் தெரிவித்தார். அரசு கல்லூரிகளில் மொத்தம், 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சில கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி தராததால், முதற் கட்ட கலந்தாய்வு இடங்களில் எண்ணிக்கை, குறைவாக இருக்கும் என, தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக