லேபிள்கள்

15.6.14

பி.இ.,இரண்டாம் ஆண்டு கவுன்சிலிங்: 19 ல் தொடக்கம்: ஒரு லட்சம் இடங்கள் ஒதுக்கீடு

பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான, கவுன்சிலிங் ஜூன் 19 ல் காரைக்குடியில் தொடங்குகிறது. ஒரு லட்சம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

டிப்ளமோ, பி.எஸ்.சி.,யில், கணிதத்தை ஒரு பாடமாக எடுத்தவர்கள், பி.இ., பி.டெக்.,இரண்டாம் ஆண்டு, நேரடியாக சேருவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி, மே 13 ல் தொடங்கியது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடந்த 6 கடைசிநாள். மொத்தம் 21,428 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சிவில் பிரிவுக்கு 4219, மெக்கானிக்கல் 7,265, எலக்ட்ரானிக்ஸ் 9,479 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லூரியில், வரும் 19 ல் தொடங்கி, ஜூலை 2 ல் முடிவடைகிறது.

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் மாலா கூறியதாவது: விண்ணப்பித்தவர்களுக்கு, அழைப்பு கடிதம் அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் தீதீதீ.ச்ஞிஞிஞுt.டிண என்ற இணையதள முகவரியில், தங்கள் கட்- ஆப் மதிப்பெண் மூலம் கவுன்சிலிங் தேதி விபரத்தை அறிந்து கொள்ளலாம். 19-ம் தேதி காலை 9 மணிக்கு பி.எஸ்.சி.,யில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்தவர்களுக்கான கவுன்சிலிங் தொடங்குகிறது. அன்றே, விளையாட்டு பிரிவினருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, கெமிக்கல், லெதர், டெக்ஸ்டைல், பிரின்டிங் கோர்ஸ்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. 20 முதல் 22 வரை சிவில், 23 முதல் 27 வரை மெக்கானிக்கல், 27 முதல் ஜூலை 2 வரை எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அதன் உப பிரிவுகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. மாணவர்கள் 10ம் வகுப்பு மார்க் ஷீட், டிப்ளமோ புரவிஷனல் சான்றிதழ், பி.எஸ்.சி., சான்றிதழ், டி.சி., ஆகியவற்றின், அசலினை கொண்டு வர வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வந்து, வருகை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பொது பிரிவுகளுக்கான கலந்தாய்வு காலை 8 முதல், மாலை 6 மணி வரை நடக்கும். கடந்த ஆண்டு ஒருநாளைக்கு, ஐந்து பிரிவுகளாக கவுன்சிலிங் நடந்தது. இந்த ஆண்டு அதை ஆறாக உயர்த்தியுள்ளோம். இதன்படி, நாள் ஒன்றுக்கு 1800 மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பர். கவுன்சிலிங்கில் பங்கேற்று, கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்கள், ஜூலை 2-ம் தேதி, கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் உள்ள 534 இன்ஜி., கல்லூரிகளிலிருந்து, 20 சதவீதம் வீதம், ஒரு லட்சம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும், என்றார். உடன் ஒருங்கிணைப்பாளர் கணேசன் இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக