லேபிள்கள்

29.6.14

தினமும் மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை

வேலூர்: அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மாலை நேரம் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறும். அதில் முக்கிய பாடங்களை படிக்க மற்றும் எழுத கற்பிக்கப்படும். சிறப்பு தேர்வுகளும் நடத்தப்படும். இந்த சிறப்பு வகுப்புகள் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தொடங்குகிறது. 


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சுமாராக படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்வி திறன் குறைவாக இருக்கும் மாணவர்கள் நடத்தும் பாடங்களை கவனிப்பது சிரமம் ஏற்படுகிறது. இதனால் இவர்கள் மீது தனி கவனம் செலுத்துவதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. வாரத்தில் 5 நாட்களில் தினமும் 1 பாடம் என பிரித்துக்கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக