பத்து நாள் இடைவெளிக்குப் பின், வரும், 7ம் தேதி முதல், பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்குகிறது. இது குறித்த தகவல், எஸ்.எம்.எஸ்., மூலம், 1.68 லட்சம் மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த, நான்கு புதிய கல்லுாரிகளுக்கு, அனுமதி அளிப்பது; ஏழு கல்லுாரிகளுக்கு, பல்வேறு பாடப் பிரிவுகளில், கூடுதல் இடங்களை அனுமதிப்பது தொடர்பாக, ஏ.ஐ.சி.டி.இ., உச்ச நீதிமன்றத்தில், கூடுதல் கால அவகாசம் கேட்டதால், கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது.தற்போது, 11 கல்லுாரிகளுக்கும், உரிய அனுமதியை, ஏ.ஐ.சி.டி.இ., வழங்கி விட்டதாக, பல்கலை வட்டாரம் தெரிவித்தது.
உத்தரவு: சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரம், ஓரிரு நாளில் வழங்கப்பட உள்ளது. இதனால், 'வரும், 7ம் தேதி முதல், பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்கும்' என, அண்ணா பல்கலை, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது: வரும், 7ம் தேதி முதல், ஆகஸ்ட், 4ம் தேதி வரை, பொதுப்பிரிவு கலந்தாய்வு நடக்கிறது. பல்வேறு காரணங்களால், நிரம்பாத இடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 15 வரை, கால அவகாசம் வழங்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, ஆகஸ்ட், 4ம் தேதி வரை, கலந்தாய்வை நீட்டித்துள்ளோம். புதிய கலந்தாய்வு அட்டவணையை, www.annauniv.eduஎன்ற பல்கலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். மேலும், மாணவர்களின், 'ரேங்க்' பட்டியலில், அவர்களுக்கான புதிய கலந்தாய்வு தேதி உள்ளிட்ட விவரங்களையும் தெரிவித்துள்ளோம்.
எஸ்.எம்.எஸ்., தகவல்:பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள, 1.68 லட்சம் மாணவர்களுக்கும், புதிய அறிவிப்பு குறித்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பி உள்ளோம். கடந்த மாதம், 27ம் தேதி கலந்தாய்வுக்கு வர வேண்டிய மாணவர்கள், வரும், 7ம் தேதி வர வேண்டும். இவ்வாறு, ரைமண்ட் தெரிவித்தார். கலந்தாய்வு தேதியை, அண்ணா பல்கலை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததன் மூலம், ஒரு வாரமாக மாணவர்கள் மத்தியில் நீடித்து வந்த பதற்றம், முடிவுக்குவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக