லேபிள்கள்

3.7.14

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ 'கட்ஆப்'

எம்.பி.பி.எஸ்., மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், எந்தப் பிரிவு மாணவர்கள் எத்தனை 'கட் ஆப்' மதிப்பெண்ணுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் வெளி
யிடப்பட்டது.மருத்துவ கல்வித் துறையில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர தயாராகி வருகின்றனர். அடுத்து அகில இந்தியா அளவிலான 'கோட்டா'வில் (15 சதவீதம்) சேர 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
முதற்கட்ட கலந்தாய்வில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீடு சீட்களுக்கு, இடஒதுக்கீடு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் 'கட் ஆப்' மதிப்பெண் விபரம்:
அரசு கல்லூரிகள்பொதுப் பிரிவினர் 199.25, பிற்பட்டோர் 198.5, பிற்பட்டோர் முஸ்லிம் பிரிவினர் 197.5, மிக பிற்படுத்தப்பட்டோர் 197.75, தாழ்த்தப்பட்டோர் 195.25, தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியினர் 192.5, மலைஜாதியினர் 188, வரை கட் ஆப் மதிப்பெண் வைத்திருந்தவர்கள் சீட் பெற்றுள்ளனர்.
தனியார் கல்லூரிகள்தனியார் கல்லூரிகளில், பொதுப் பிரிவினர் 198.25, பிற்பட்டோர் 198, பிற்பட்டோரில் முஸ்லிம்கள் 197, மிக பிற்படுத்தப்பட்டோர் 197, தாழ்த்தப்பட்டோர் 193.5, தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியினர் 190.75, மலைஜாதியினர் 185.75.
பல்மருத்துவம்அரசு பல்மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு விபரம்: பொதுப்பிரிவினர் 198.25, பிற்படுத்தப்பட்டோர் 198, பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் 197, மிக பிற்படுத்தப்பட்டோர் 197.25, தாழ்த்தப்பட்டோர் 194.25, தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியினர் 192, மலைஜாதியினர் 187.50 கட் ஆப் மதிப்பெண்ணில் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக