லேபிள்கள்

17.9.14

இன்றும், நாளையும் நடைபெற இருந்த காலாண்டு தேர்வு தள்ளிவைப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு ஒரே அட்டவணையின்படி நடத்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 15–ந் தேதி முதல் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சி மன்ற தேர்தலையொட்டி இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நடைபெற இருந்த தேர்வுகள் அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக