லேபிள்கள்

18.9.14

ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை பட்டதாரி ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு

ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு செய்துஇடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரிசென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் பட்டதாரி ஆசிரியர்கள்
கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்மனுவில் அவர்கள்கூறியிருப்பதாவதுபட்டதாரி ஆசிரியர் பணி இடத்தில் வெயிட்டேஜ்முறை நடைமுறைப்படுத்தபட்டது குறித்து தமிழகம் முழுவதும்எதிர்ப்பு கிளம்பியுள்ளதுபலர் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வுபட்டியலில் இடம் பெற்றுள்ளனர்பட்டதாரி ஆசிரியர் பணி இடத்தில்முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வந்ததுஆசிரியர் தேர்வுஆணையத்தில் பணியாற்றிவிருப்ப ஓய்வு பெற்ற கோவையைசேர்ந்த இளங்கோவன் என்பவர் இதில் இடைத்தரகராக செயல்பட்டுவருகிறார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆசிரியர் தகுதித் தேர்வு பயிற்சி மையம்நடத்தி வரும் கலைநேசன் என்பவரும்இவருடன் சேர்ந்து கொண்டுஆசிரியர் பணி வாங்கி தருகிறேன் என பலரிடம் யி80 லட்சத்துக்கும்மேல் பணம் வசூலித்துள்ளனர்இவர்கள் இருவரும் சென்ட்ரல் மற்றும்எழும்பூரில் மாற்று பெயரில் விடுதி எடுத்து தங்கி மோசடியில்ஈடுபட்டுள்ளனர்இளங்கோவனை கண்டுபிடித்தால் மேலும் பலஇடைத்தரகர்களின் பெயர் வெளிவரும்.இவ்வாறு அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக