லேபிள்கள்

16.9.14

TET வழக்கு இன்றைய வாதத்தில் சில துளிகள்

இன்று காலை 11 அளவில் TET குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 5 முக்கிய வழக்குரைஞர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞர்களும் ஆஜராகி வாதாடினார்கள்.
அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.

காலையில் 5% தளர்வு முன் தேதியிட்டு வழங்கியது செல்லாது என்று வாதாடிய வழக்குரைஞ்சர்களுக்கு 5% தளர்வு வழங்குவதும் வழங்காததும் அரசின் கொள்கை முடிவு என்று நீதிபதிகள் தீர்க்கமான வார்த்தைகளை உதிர்த்ததாக தெரிகிறது.

அடுத்து G.O 71 க்கு எதிரான வாதம்.இந்த வாதத்தின் போது தமிழகத்தில் பல்வேறு பாடத்திட்டம்(syllabus) பின்பற்றப்பட்டு பல்வேறு வகையான வழியில்(medium-CBSC,STATE BOARD.......like that) கல்வி கற்பிக்கப் படுகிறது.எனவே weightage முறையில் அவர்கள அனைவரையும் ஒரே மாதிரி கணக்கில் கொள்வது தவறு என்று வாதிகளின் வழக்குரைஞ்சர்கள் வாதாடினார்கள்..

அதற்கு மறுப்பு தெரிவித்த மாண்புமிகு நீதிபதிகள், பிற கலந்தாய்வுகளின் பொழுது CBSC க்கு தனியானதொரு கலந்தாய்வும் state board க்கென ஒரு தனியான கலந்தாய்வும் நடைபெறுகிறதா என்ற கேள்வியை அந்த வாதங்களை முன் வைத்த வழக்குரைஞர்களிடமே முன் வைத்தார்.அதற்கு சில வினாடிகளுக்குப் பிறகு இல்லையென்றே பதில் வந்தது.அதைப்போலவே CBSC,STATE BOARD க்கு என தனித்தனியான weightage மதிப்பெண் வழக்கும் முறை கடைபிடிக்க முடியாது என நீதிபதி அவர்களே தெரிவித்துள்ளார்கள்.வாதிகளின் பல கேள்விகளுக்கு நீதிபதிகள் அவர்களே எதிர் கேள்வி கேட்டு நியாத்தை வெளிக்கொணர்கிறார்கள்.

அரசு தரப்பில் வாதாடும் AG அவர்களும் இன்ன பிற வழக்குரைஞ்சர்களும் சிறப்பாக வாதாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக