அரசுத் தேர்வுத்துறையில் வெளி ஆட்களின் நடமாட்டத்தை தடுப்பதற்காக பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் கார்டுகள் வழங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.அரசுத் தேர்வுத் துறையின் மூலம் ஆண்டுக்கு சுமார் 40க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இத தவிர 8ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கான தேர்வுகள் முக்கியமானதாக உள்ளன. இது தவிர, மைக்ரேஷன் சான்று, மதிப்பெண் பட்டியலில் ஏற்படும் பிழைகளை திருத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தேர்வுத்துறையில் நடக்கிறது. பல மாணவர்களின் சான்றுகளை கையாள வேண்டிய இடம் என்பதால் தேர்வுத்துறை மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படுகிறது. இந்நிலையில், சான்றுகளில் ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக மாணவர்கள் நேரடியாக தேர்வுத்துறைக்கு வரவேண்டியுள்ளது. பிரச்னைகள் தொடர்பாக தீர்வுகாண்பதற்காக தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.இருப்பினும் சில நேரங்களில் வெளி ஆட்கள் அதிக அளவில் தேர்வுத்துறைக்கு வருவதாக புகார்கள் வருகின்றன. ஒரு சிலர் பிரச்னைகளை தீர்த்துக் கொடுப்பதாக மாணவர்களை அணுகி அவர்களிடம் பணம் வசூலிப்பதும் தொடர்கிறது. இதனால், வெளியாட்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று தேர்வுத் துறை அறிவிப்பு பலகையும் வைத்துள்ளது. இருப்பினும் வெளியாட்களின் நடமாட்டம் தொடர்கிறது. அதனால், தேர்வுத்துறையில் பணியாற்றும் நபர்கள் தவிர மற்றவர்கள் தேர்வுத்துறை அலுவலக பகுதிக்குள் வருவதை தடை செய்ய தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.அதனால், தேர்வுத்துறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் பயோ மெட்ரிக் முறையிலான வருகைப் பதிவை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
மேலும், முன் அனுமதியின்றி வெளியாட்கள் உள்ளே வராத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக பிரச்னை என்று வரும் மாணவர்களை தகவல் மையத்தில் உட்கார வைத்து அவர்களிடம் டெலிகான்பரன்சிங் முறையில் விசாரணை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக